Showing posts with label Maruthuvam. Show all posts
Showing posts with label Maruthuvam. Show all posts

Wednesday, November 22, 2017

வெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்! VikatanPhotoStory

ன் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக் அல்ல. உண்மை. நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன... அவற்றின் பலன்கள் என்னென்ன. பார்க்கலாமா?
துளசி மூலிகை
துளசி
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு, துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம். 
தூதுவளை
தூதுவளை
சளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.
ஆடாதொடை
ஆடாதொடை
சளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்தால் ஆஸ்துமா, இருமல், காய்ச்சல் குணமாகும். காச நோயாளிகள் 40 நாள்கள் தொடர்ந்து இதைச் சாப்பிட்டால் அதன் தீவிரம் குறையும்.
ஓமவல்லி
ஓமவல்லி
இருமல், சளி, ஜலதோஷத்துக்கு ஓமவல்லி முக்கிய மருந்து. இதன் இலைச்சாற்றை லேசாகச் சூடுபடுத்தி தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இருமல், மார்புச் சளி சரியாகும். மழைக்காலத்தில் மாலை நேரச் சிற்றுண்டியாக ஓமவல்லி பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
கற்றாழை
கற்றாழை
கற்றாழை ஜூஸ் சாப்பிட்டால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள் விலகும். சர்க்கரை நோயாளிகள் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தினால், சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கலாம். கற்றாழையின் வேர் தாம்பத்ய உறவு மேம்பட உதவும்.
வெற்றிலை
வெற்றிலை
குழந்தைகளுக்கு சளி, இருமலின்போது, ஒரு வெற்றிலையுடன் ஐந்து துளசி இலை சேர்த்து சாறு பிழிந்து 10 சொட்டுக் கொடுத்தால் குணமாகும். நெஞ்சுச்சளி இருந்தால் அது மலத்துடன் வெளியேறிவிடும். பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு கொடுத்தால், விஷம் முறிந்துவிடும்.
நொச்சி
நொச்சி
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடித்தால் சளி, இருமல் விலகும். தலையணையின் அடியில் நொச்சி இலையை வைத்துத் தூங்கினால் தலைபாரம், சைனஸ் தொந்தரவு நீங்கும்  மிளகு, பூண்டுடன் நொச்சி இலையைச் சேர்த்து மென்று தின்றால் ஆஸ்துமா குணமாகும்.
செம்பருத்தி
செம்பருத்தி
செம்பருத்திப் பூக்களை ஜூஸ் அல்லது தேநீராக்கிப் பருகினால் ரத்த அழுத்தம் குறையும். செம்பருத்தி இலை, பூக்களை வெறுமனே அரைத்துப் பூசினால் முடி உதிர்தல் பிரச்னை தீரும். இதைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சியும் பயன்படுத்தலாம். செம்பருத்தி ஓர் இயற்கையான தங்கபஸ்பம்.
மருதாணி
மருதாணி
மருதாணி இலையை மையாக அரைத்து கைகளில் போட்டுக்கொண்டால் உடல் வெப்பம் தணியும். நோய்கள் வராமல் தடுக்கும். அடிக்கடி மருதாணி போடுவது மனநோய் வராமல் தடுக்கும். ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண்ணுக்கு மருதாணி இலையை அரைத்து, நீரில் கரைத்து, வாய் கொப்பளிக்கலாம். தலையணைக்கடியில் மருதாணிப்பூவை வைத்தால் நன்றாகத் தூக்கம் வரும். 
மஞ்சள் கரிசலாங்கண்ணிவெள்ளை கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி
குழந்தைகளுக்கு வரும் சளித்தொல்லையைப் போக்க இரண்டு சொட்டு கரிசலாங்கண்ணி இலைச்சாற்றுடன் எட்டு சொட்டு தேன் கலந்து குடிக்கலாம். மலச்சிக்கல் தீர கரிசாலை இலையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். நோய்கள் வராமலிருக்க கீரையைச் சமைத்தோ, சாறு எடுத்துக் குடிப்பதோ நல்லது.
நிலவேம்பு
நிலவேம்பு
நிலவேம்பு முழு தாவரத்தையும் நீர்விட்டு, கொதிக்கவைத்து 30 மி.லி வீதம் காலை, மாலை வேளைகளில் மூன்று நாள் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் மூன்று நாள்கள் காலை, மாலை எனக் குடித்தால் கல்லீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.
பிரண்டை
பிரண்டை
பிரண்டையைச் சிறு துண்டுகளாக நறுக்கி, நல்லெண்ணெய் அல்லது நெய்யில் வதக்கி உப்பு, புளி, காரம் சேர்த்துத் துவையலாக அரைக்கலாம். இதைச் சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாகும்; மூளை நரம்புகள் பலப்படும்; குடல் வாயுவை அகற்றும். குழந்தைகளுக்குக் கொடுத்தால் எலும்புகள் பலப்படும்.
திருநீற்றுப் பச்சிலை
திருநீற்றுப் பச்சிலை
நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்து, கட்டிகளின் மீது பூசினால் சட்டென கரையும். தலைவலி, இதய நடுக்கம், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை வெறுமனே முகர்ந்தால் பிரச்னை சரியாகும். இலையை மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் சரியாகும்.
முடக்கத்தான்
முடக்கத்தான்
மழைக்காலங்களில் செழித்து வளரும் முடக்கத்தான் கீரையை அரைத்து, தோசை மாவுடன் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். இலையை நீர்விட்டு, கொதிக்கவைத்து உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சூப் செய்தும் அருந்தலாம். இதனால் மூட்டுவலி, முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி விலகும்.
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை இலைச்சாறு 30 மி.லி அளவு எடுத்து வெறும் வயிற்றில் 10 நாள்கள் குடித்தால் மாதவிடாயின்போது ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாகச் சுரக்க கல்யாண முருங்கை இலையைத் தேங்காய் எண்ணெயில் சமைத்துச் சாப்பிடலாம்.
நித்திய கல்யாணி
நித்திய கல்யாணி
ஐந்து நித்திய கல்யாணிப் பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்க வேண்டும். அதை ஒரு நாளைக்கு நான்கு வேளை குடித்தால் அதிக தாகம், அதிக சிறுநீர்ப்போக்கு மற்றும் அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். இதன் வேர்ச்சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர்ச் சர்க்கரை குறையும்.
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசி
அம்மான் பச்சரிசியின் பாலை முகத்தில் தடவினால் முகப்பரு குணமாகும். கால் ஆணி, பித்த வெடிப்பு மறையவும் இதன் பாலைப் பூசலாம். தாய்ப்பால் சுரப்பு குறைந்தவர்கள் அம்மான் பச்சரிசியின் செடிகளை அரைத்து எலுமிச்சைப் பழ அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் பால் சுரக்கும்.
அகத்தி
அகத்தி
அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டால், வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை விலகும். அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் சேர்த்து அரைத்து, தேய்த்துக் குளித்தால்,  கண்களுக்குக் கீழே காணப்படும் கருவளையம் மறையும்.
கீழாநெல்லி
கீழாநெல்லி
கீழாநெல்லியை (50 கிராம்) நன்றாகக் கழுவி 200 மி.லி எருமைத் தயிரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மஞ்சள்காமாலை குணமாகும். மருந்து சாப்பிடும் மூன்று நாள்களும், உணவுடன் மோர் சேர்க்க வேண்டும். கீழாநெல்லியுடன் கற்கண்டு சேர்த்து அரைத்து காலை, மாலை என நான்கு நாள்கள் சாப்பிட சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும்.
சீந்தில் கொடி
சீந்தில் கொடி
சீந்திலின் முதிர்ந்த கொடிகளை உலரவைத்துப் பொடியாக்கி காலை, மாலை அரை டீஸ்பூன் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும். இதைப் பனங்கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிட சர்க்கரைநோயால் ஏற்படும் கை கால் அசதி, உடல் மெலிவு, அதிக தாகம் போன்றவை சரியாகும்.
தவசி முருங்கை
தவசி முருங்கை
தவசி முருங்கை இலைச் சாற்றைச் சாப்பிட்டால், மூக்கில் நீர் வடிதல், உள்நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும். தவசி முருங்கை இலை ஒரு கைப்பிடி, சிறிது உப்பு, மிளகு சேர்த்து அரைத்துப் பிழிந்த சாற்றுடன் தேன் சேர்த்து ஒரு டீஸ்பூன் வீதம் கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் வயிற்று உப்புசம் உடனே சரியாகும்.
திப்பிலி
திப்பிலி
திப்பிலியில் அதன் பூக்கள்தான் மருந்தாகப் பயன்படுகின்றன. இதை வறுத்துப் பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனுடன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை சரியாகும். திப்பிலியைப் பொடியாக்கி 1:2 என்ற விகிதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும்.
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சிணுங்கி
தொட்டாற் சிணுங்கியை களிமண்ணுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் வாத வீக்கம் நீங்கும். கீல் வாதத்துக்கும் இது நல்ல மருந்து. இதன் இலை, வேரைச் சம அளவு எடுத்து உலரவைத்து பொடியாக்கி 10 முதல் 15 கிராம் வரை பசும்பால் சேர்த்துச் சாப்பிட்டால் மூலம், சிறுநீர் நோய்கள் குணமாகும்.
நேத்திரப் பூண்டு
நேத்திரப் பூண்டு
நேத்திரப் பூண்டு மூலிகையைப் பொடியாக நறுக்கி, செம்பு பாத்திரத்தில் போட்டு அது மூழ்குமளவு நல்லெண்ணெய் ஊற்றி பத்து நாள்கள் வெயிலில் வைத்து எடுத்து வடிகட்டவும். இதில் 2, 3 சொட்டுகள் காலை, மாலை கண்களில் விட்டுவந்தால் 96 விதமான கண் நோய்கள் சரியாகும். மெட்ராஸ் ஐ நோயும்கூட குணமாகும்.
பவளமல்லி
பவளமல்லி
பவளமல்லி இலைகள் ஐந்து எடுத்து, நீர்விட்டு அலசி சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்கவைக்க வேண்டும். இதை வடிகட்டி, தினமும் இரண்டுவேளை குடித்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் சரியாகும். ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; சளி, இருமல் கட்டுக்குள் வரும்.
லெமன்கிராஸ்
லெமன்கிராஸ்
லெமன்கிராஸ் இலை இரண்டை எடுத்து மூன்று கிராம்பு, லவங்கப்பட்டை - மஞ்சள்தூள் சிறிது, பாலுடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டவும். இதைக் குடித்தால் காய்ச்சல், இருமல், சளி குணமாகும். இதன் இலையுடன் தேயிலை, இஞ்சி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து நீர்விட்டுக் கொதிக்கவைத்து, தேநீர் போலவும் செய்து அருந்தலாம்.
ஊமத்தை
ஊமத்தை
ஊமத்தை இலைகளை நல்லெண்ணெயில் வதக்கி ஒத்தடம் போட்டால் கீல் வாயு குணமாகும். அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் அரை லிட்டர் ஊமத்தை இலைச் சாறு சேர்த்து நீர் வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இது குளிர்ந்ததும் பத்திரப்படுத்தி புண்கள், அழுகிய புண்களின் மீது வெளிப்பூச்சாகத் தடவினால் குணமாகும்.
நன்றி: சித்ரா மோகன்குமார்,

Friday, March 17, 2017

*தினம் ஒரு மூலிகை*

*ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.*

*🍁திங்கள் – அருகம்புல்☘*

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

*🍁செவ்வாய் – சீரகம்☘*

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

*🍁புதன் – செம்பருத்தி☘*

இரண்டு செம்பருத்தி பூ
( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

*🍁வியாழன் – கொத்துமல்லி☘*

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

*🍁வெள்ளி – கேரட்☘*

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

*🍁சனி – கரும்பு சாறு☘*

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

*🍁ஞாயிறு – இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை  சுத்திகரிக்கும்.!
சாப்பாட்டுக்கு பிறகு எடுப்பது நலம் 😃

Saturday, April 23, 2016

அமிர்த கரைசல், ஜீவாமிர்தம்......

அமிர்த கரைசல்
பச்சை பசுஞ்சாணம் -10kg
பசுவின் கோமியம் -10லிட்
நாட்டு சர்க்கரை -250g
தண்ணீர் -100lit
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.
பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.
மீன் அமினோ அமிலம்
‘மீன் அமிலம்’ தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து… நன்கு பிசைந்து… ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே ‘மீன் அமிலம்’. 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்து பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது

Tuesday, March 8, 2016

உடல் சூடு குறைய.........

உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கிறதா?

சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும்தண்ணி தினமும் 3- 4 லிட்டர் குடிங்க.குளிர்ந்த தண்ணீர் குடிக்க வேண்டாம். நார்மல் நீரே போதும்சீரகத்தை நீரிலிட்டுகொதிக்க வைத்து, அந்தசீரக நீரைக், குடித்தால் உட‌ல் சூடு த‌ணியு‌ம்.மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டுஉடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும்வெள்ளரியை அறுத்து கண்களில் வைங்க..நிறைய ஃப்ரூட்ஸ் சாப்பிடுங்க..வாரத்திற்கு இரண்டு நாள் நல்லா நல்லெண்ணைய் தேய்த்து தலைக்கு குளிங்க.நிறைய மோர் குடிங்க.வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் சாப்பிடலாம்.தினமும் தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்.மாங்காய், மாம்பழம் சேர்க்க வேண்டாம்.இளநீர் அதிகம் அருந்துங்கள்.பாட்டில் பானங்கள் அருந்த வேண்டாம்வாரத்தில் ஒரு நாள் வெந்தயக்களி சாப்பிடலாம்.நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.பிறகு, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடல் சூடு தணிந்து சம அளவைஅடையும்......