Thursday, March 31, 2016

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இந்த ஜூஸை மூன்று வாரம் குடிங்க!

சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான். இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது. நுரையீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்! இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான். உடலில் இரத்தத்தில் நச்சுக் கலந்துவிட்டால் அது ஏனைய உடல் பாகங்கள் முழுவதும் சேதத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள்! இதனால் தான் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது.

ஆளிவிதைகள் 
ஒரு நாளுக்கு மூன்று ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் உட்கொண்டு வந்தால் உங்கள் குடலை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியும். மேலும் சிறுகுடலில் தேங்கும் சளி, மல தகடு, ஒட்டுண்ணிகள் போன்றவற்றை அகற்றவும் இது உதவுகிறது.

கொழுப்பைக் கரைக்க
 மேலும் இது உடல் எடையை சீரான முறையில் குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. இதை நீங்கள் பின்பற்றி வருவதால் உடலில் நேர்மறை விளைவுகள் நிறைய உண்டாகும்.

இரத்தம்
 ஆளிவிதைகள் நச்சுக்களை உடலில் இருந்து போக்குவது மட்டுமின்றி, இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயனளிக்கிறது. மேலும் இது சுவாசக் குழாய், வாயுக் குழாய், சிறுநீர் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்து உடல்நலத்தை ஊக்குவிக்கிறது.

முதல் வாரம்
 முதல் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

இரண்டாம் வாரம்
 இரண்டாம் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.


மூன்றாம் வாரம்
 மூன்றாம் வாரம் காலை உணவில் நொதித்த 150 மில்லி மோரில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

குறிப்பு
 அரைத்த ஆளிவிதைகள் கிடைக்கவில்லை எனில், முழு ஆளிவிதைகளை வாங்கி நீங்களே கூட அரைத்துக் கொள்ளலாம். மூன்று வாரம் தொடர்து காலை வேளையில் இதை உண்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

தண்ணீர்
 மறவாமால் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்து வாரங்கள். மேலும் இந்த முறையை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால் குடல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.

குழந்தை வளர்ப்பு குறிப்புகள்



* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
* சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.
* வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன்
மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
* டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.
* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
* “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
* குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.
* வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

குழந்தைகள் நோய்களுக்கு தீர்வு



குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது.
இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி  குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.
அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.
அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.
இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள்,  பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால்  உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.
சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.
சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்சனை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

உணவு முறை

நவதானியக் கஞ்சி
முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த உணவை துவங்கலாம்.
வெஜ்ரைஸ்
கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.
ஸ்வீட் ஆப்பிள்
ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்

குழந்தை பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக் காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும். கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல் கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.
கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட்,  பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக் கொடுக்க வேண்டியதில்லை.

பாட்டி வைத்தியம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் விடவும். அது  கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய் தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில் இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம்.
கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.
முற்றிய தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
6 மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.
கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.
கேழ்வரகை முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள்


குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சத்தான உணவுகள் மிகவும் அவசியமாக விளங்குகிறது. சில எளிதான உணவுகள் கூட அதிக சத்துக்களைக் கொண்டிருக்கும்.
அதில் முக்கியமான ஐந்து உணவுப் பொருட்களில் உடலினை சிறப்பாக பாதுகாக்க உதவும் சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
அவை
1. வாழைப்பழம் - இதில் நார் சத்தும் உடலுக்குத் தேவையான பொட்டாசியசத்தும் அதிகப்படியாக காணப்படுகிறது. வாழைப்பழம் எலும்பு, சிறுநீரகம், இதயம் போன்றவற்றை பாதுகாக்க உதவுகிறது.
2. பால் - குழைந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குழந்தைகள் அன்றாடம் இரண்டு அல்லது மூன்று டம்ளர் பால் கண்டிப்பாக அருந்த வேண்டும். அப்பொழுது தான் வளரும் குழந்தைகளின் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
3. முட்டை - இதில் அதிகப்படியான புரதச் சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டை என்பது அதிக சத்துக்கள் அடங்கிய ஒரு மாத்திரை என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு முட்டையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எளிதாக பல சத்துக்கள் கிடைத்து விடுகின்றன.
4. உலர் திராட்சை - இதனை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் நார் சத்து எளிதாக கிடைக்கிறது. சாப்பிடுவதற்கு இணிப்பாகவும் சத்தானதாகவும் உள்ளதால் குழந்தைகளும் விரும்புவர். உலர் திராட்சையை சுடுநீரில் நன்கு கழுவிய பிறகே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
5. பருப்பு வகைகளில் - அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையான கொழுப்பை தக்க வைக்கவும் புரதச் சத்து உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஆகாரமாகவும் பருப்பு வகைகள் உள்ளன. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் போன்றவைகள் அதிக சத்துக்கள் நிறைந்த பருப்புகளாகும்.
குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்து உடல் நலத்தை வீணாக்குவதை விட சத்தான உணவு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து அவ்வப்போது கொடுப்பதால் உடலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை



தடுப்பூசி

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை

  • பிசிஜி – பிறப்பின் போது
  • ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
  • ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
  • டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
  • டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
  • டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
  • அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
  • சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
  • எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
  • எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
  • டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
  • ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
  • டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
  • டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
  • ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
  • எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
  • வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
  • வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
  • டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
  • சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
  • டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
  • டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்
குறிப்பு
மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை  பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்த‍வே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்
ஆதாரம் : அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.
உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.
உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.
உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.
குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.
குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்



உணவில் பசும்பால்

குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.

எலும்புகளை வலிமையாக்குகிறது

பசும்பாலில் போதியளவு கால்சியம் உள்ளது. இது உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. அதிகளவு கால்சியம் மற்றும் ஏனைய சத்துகள் மூலம் இது குழந்தைகளின் தசைக் கட்டுப்பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

வைட்டமின்கள்

பசும்பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது குழந்தையின் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. மேலும் வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்றஆபத்துகளை இது குறைக்கிறது.

புரோட்டீன்கள்

குழந்தைகள் வளரும் வயதில், அவர்களுக்கு புரோட்டீன் அவசியம். பசும்பால் மூலமாக நீங்கள் அவர்களுக்கு இதை வழங்கலாம். அதுமட்டுமல்லாமல் உங்கள் குழந்தையை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளது.

பசும்பால்

உங்கள் குழந்தைகளுக்கு அதிகளவில் பசும்பால் கொடுக்க வேண்டாம். இது சில சமயங்களில் ரத்த சோகையை ஏற்படுத்தலாம். எனவே, நடுத்தரமான அளவு கொடுக்கவும். ஒரு நாளைக்கு 16 அவுன்ஸ் (2 கப்) என்ற அளவில் நீங்கள் துவங்கலாம். பின்னர் குழந்தைக்கு இரண்டு வயது நெருங்கும் போது படிப்படியாக 24 அவுன்ஸ் வரை அதிகரிக்கலாம். உங்கள் குழந்தைக்கு பால் தேவைப்படும் அதே நேரம், இதன் மூலம் ஏனைய திட உணவுகள் உட்கொள்ளும் அளவு குறையலாம். எனவே, பசும்பால் கொடுக்கத் துவங்குமுன் குழந்தையின் பசியில் கவனத்துடன் இருங்கள்.
ஆதாரம் : அரசு தாய்சேய் நல மருத்துவமனை