Thursday, March 31, 2016

குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை போக்க இந்த ஜூஸை மூன்று வாரம் குடிங்க!

சராசரியாக ஒரு மனிதன் 70 வயது வரை வாழ்ந்தால். அவன் 100 டன் அளவு உணவும், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் உட்கொள்கிறான். இதனால் நமது வாழ்நாளில் நமது குடலில் ஏறத்தாழ குறைந்தது 15 கிலோ வரை நச்சுக்கள் தங்குகின்றன. இவற்றை மொத்தமாக நாம் வெளியேற்றுவதே கிடையாது. நுரையீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்! இவ்வாறு முழுமையாக வெளியேற்றப்படாத நச்சுக்களால் உடலில் முதலில் சேதமடைவது இரத்தம் தான். உடலில் இரத்தத்தில் நச்சுக் கலந்துவிட்டால் அது ஏனைய உடல் பாகங்கள் முழுவதும் சேதத்தை உண்டாக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுப் பொருட்கள்! இதனால் தான் நமது குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறப்படுகிறது.

ஆளிவிதைகள் 
ஒரு நாளுக்கு மூன்று ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் உட்கொண்டு வந்தால் உங்கள் குடலை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட முடியும். மேலும் சிறுகுடலில் தேங்கும் சளி, மல தகடு, ஒட்டுண்ணிகள் போன்றவற்றை அகற்றவும் இது உதவுகிறது.

கொழுப்பைக் கரைக்க
 மேலும் இது உடல் எடையை சீரான முறையில் குறைக்கவும், கொழுப்பை கரைக்கவும் கூட வெகுவாக உதவுகிறது. இதை நீங்கள் பின்பற்றி வருவதால் உடலில் நேர்மறை விளைவுகள் நிறைய உண்டாகும்.

இரத்தம்
 ஆளிவிதைகள் நச்சுக்களை உடலில் இருந்து போக்குவது மட்டுமின்றி, இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க பயனளிக்கிறது. மேலும் இது சுவாசக் குழாய், வாயுக் குழாய், சிறுநீர் குழாய் போன்றவற்றை சுத்தம் செய்து உடல்நலத்தை ஊக்குவிக்கிறது.

முதல் வாரம்
 முதல் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

இரண்டாம் வாரம்
 இரண்டாம் வாரம் காலை உணவில் நொதித்த 100 மில்லி மோரில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.


மூன்றாம் வாரம்
 மூன்றாம் வாரம் காலை உணவில் நொதித்த 150 மில்லி மோரில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவு அரைத்த ஆளிவிதைகள் கலந்து குடித்து வாருங்கள்.

குறிப்பு
 அரைத்த ஆளிவிதைகள் கிடைக்கவில்லை எனில், முழு ஆளிவிதைகளை வாங்கி நீங்களே கூட அரைத்துக் கொள்ளலாம். மூன்று வாரம் தொடர்து காலை வேளையில் இதை உண்டு வந்தால் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

தண்ணீர்
 மறவாமால் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடித்து வாரங்கள். மேலும் இந்த முறையை நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை பின்பற்றி வந்தால் குடல் சார்ந்த எந்த பிரச்சனையும் வராது.

குழந்தை வளர்ப்பு குறிப்புகள்



* குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.
* வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.
* சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.
* வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன்
மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.
* டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.
* உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.
* “குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.
* பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.
* கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.
* குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
* குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
* குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.
* குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.
* வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
* குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

குழந்தைகள் நோய்களுக்கு தீர்வு



குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை

குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு தருவதில் அறியாமை, நோயின் அறிகுறிகள் பற்றிய தெளிவின்மையால் பெரிய பிரச்னைகளை குழந்தைகள் சந்திக்க வேண்டியுள்ளது.
இது போன்ற அபாயங்களைத் தடுக்க குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நுரையீரலில் வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
உலக அளவில் 90 சதவீதம் குழந்தைகளை இது போன்ற நோய்கள் தாக்குவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் மூளைக்காய்ச்சல் போன்ற அபாயங்களைத் தவிர்க்க முடியும். மருத்துவரின் ஆலோசனைப்படி  குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.
அது வரை வேறு உணவுகள் தரத் தேவையில்லை. குழந்தை பருவத்தில் அறிகுறி இல்லாமல் காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் என்பது நேரடியான நோய் கிடையாது. உடலில் உள்ள வேறு ஒரு பிரச்னையை வெளிப்படுத்தும் அறிகுறியாகும். எனவே காய்ச்சலுக்கு சரியான காரணம் கண்டறிந்து மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். இந்த சமயத்தில் ஆரம்ப அறிகுறியை மருத்துவரிடம் காட்டி மூக்கடைப்பு, சளித் தொல்லைகளுக்கான மருந்துகளை உபயோகிக்கவும்.
அதேபோல் சத்தான உணவுகள் தருவதன் மூலமும் குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்கலாம். குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைக்க வேண்டும். குழந்தைகள் பயன்படுத்தும் துணியை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.  குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதிலும் கவனம் தேவை. தாய்ப்பால் குறைவாக இருந்தால் புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது.
இது போன்ற சமயத்தில் கவனமின்மையால் நோய்த் தொற்று பரவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் காய்கறிகள், கீரை வகைகளை கல் உப்பு சேர்த்த தண்ணீரில் கழுவி சமைக்க வேண்டும். தண்ணீரின் வழியாக அதிகளவில் நோய்கள் பரவுவதால் காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். இவற்றில் கவனம் செலுத்தாமல் விடும் போது குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற உணவுகள்,  பழச்சாறுகள் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால்  உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.
சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.
சரியான சத்தான உணவு முறை மற்றும் சுகாதாரத்தை கடைபிடித்தால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. சின்ன பிரச்சனை வந்தாலும் குழந்தைகள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து தரலாம். மருந்துக் கடைகளில் மருந்து வாங்கித் தருவது மற்றும் மற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்தைப் பயன்படுத்துவதும் தவறு. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை மிக்கது. அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டியது தாயின் பொறுப்பு.

உணவு முறை

நவதானியக் கஞ்சி
முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டிபால் கொடுக்கும் போது இந்த உணவை துவங்கலாம்.
வெஜ்ரைஸ்
கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.
ஸ்வீட் ஆப்பிள்
ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

டயட்

குழந்தை பிறந்து 5 மாதங்கள் வரை தாய்ப்பால் தான் சிறந்த உணவு. இந்தக் காலகட்டத்தில் சத்துள்ள உணவுகளை தாய் உட்கொள்ள வேண்டும். பிரசவ காலத்தில் தாயின் உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறுவதால், ரத்த சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தாயும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நான்கு, ஐந்து மாதங்கள் ஆகும் போது, கலப்புணவு கொடுக்க வேண்டும். கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளில் துவங்கலாம். பழச்சாறுகள் ஐஸ் சேர்க்காமல் கொடுக்கலாம். குழந்தைக்கு பல்வேறு சுவைகளையும் இவ்வாறு அறிமுகம் செய்யலாம்.
கலப்புணவு கொடுக்கும் போது சாதத்துடன் துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து கொடுக்கலாம். இதன் அடுத்தகட்டமாக காய்கறிகள் சேர்த்து வேகவைத்து தரலாம். வேக வைத்த முட்டையும் சாப்பிட தரலாம். குழந்தைக்கு எட்டு மாதங்கள் ஆனதும் இட்லி, சப்பாத்தி, தயிர்சாதம் கொடுத்து பழக்கலாம். குழந்தைக்கு ஊட்டும் உணவு மிருதுவாகவும், எளிதில் ஜீரணம் ஆகும் வகையிலும் இருக்க வேண்டியது அவசியம். வளரும் குழந்தைக்கு இரண்டு கப் பால் அவசியம். தயிர், வெண்ணெய், ஐஸ்கிரீம் ஆகியவையும் தரலாம். இனிப்பு குறைவான சாக்லேட்,  பிஸ்கெட் தரலாம். குழந்தைகள் பசித்தால் அழுவார்கள். அவர்களை வற்புறுத்திக் கொடுக்க வேண்டியதில்லை.

பாட்டி வைத்தியம்

சுத்தமான தேங்காய் எண்ணெயை சுட வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் விடவும். அது  கொதித்து அடங்கியதும் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து இறக்கவும். ஒரு வயது வரை குழந்தையின் உடலில் இந்த எண்ணெய் தேய்த்து பின்னர் பாசி பயறு மாவு தேய்த்து குளிக்க வைப்பதன் மூலம் சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
ஒரு ஸ்பூன் வெந்தயம், மிளகு அரை ஸ்பூன், வேப்பிலை 4, துளசி 4 ஆகியவற்றை அரைத்து குழந்தையின் தலையில் தேய்த்து ஊற விட்டு குளிக்க வைத்தால் சூடு தணிக்கும். கிருமித் தொற்றில் இருந்து தடுக்கும். மாதம் ஒரு முறை மட்டுமே இப்படிக் குளிக்கலாம்.
கடுக்காய்த் தூளை வெந்நீரில் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தைக்கு ஜலதோஷம் வராமல் தடுக்கலாம்.
முற்றிய தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான பாலைக் காய்ச்சி எண்ணெய் எடுக்க வேண்டும். அந்த எண்ணெயை வடிகட்டி குழந்தைக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு குடிக்கக் கொடுத்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.
6 மாதக் குழந்தைக்கு வேப்பங்கொழுந்து, ஓமம், உப்பு சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் வராது.
கொய்யா இலையை நீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது உப்பு சேர்த்துக் கொடுத்தால் பேதி நின்று விடும்.
கேழ்வரகை முதல் நாள் ஊற வைத்து அதை அரைத்து துணியில் போட்டு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வும். இத்துடன் பால், சர்க்கரை சேர்த்துக் கொடுக்கலாம். 6 மாதம் நிறைவடைந்த குழந்தைக்கு ரசம் சேர்த்தும் கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள்


குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் சத்தான உணவுகள் மிகவும் அவசியமாக விளங்குகிறது. சில எளிதான உணவுகள் கூட அதிக சத்துக்களைக் கொண்டிருக்கும்.
அதில் முக்கியமான ஐந்து உணவுப் பொருட்களில் உடலினை சிறப்பாக பாதுகாக்க உதவும் சத்துக்கள் ஏராளமாக உள்ளன.
அவை
1. வாழைப்பழம் - இதில் நார் சத்தும் உடலுக்குத் தேவையான பொட்டாசியசத்தும் அதிகப்படியாக காணப்படுகிறது. வாழைப்பழம் எலும்பு, சிறுநீரகம், இதயம் போன்றவற்றை பாதுகாக்க உதவுகிறது.
2. பால் - குழைந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. குழந்தைகள் அன்றாடம் இரண்டு அல்லது மூன்று டம்ளர் பால் கண்டிப்பாக அருந்த வேண்டும். அப்பொழுது தான் வளரும் குழந்தைகளின் எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
3. முட்டை - இதில் அதிகப்படியான புரதச் சத்து, தாதுச்சத்து மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. முட்டை என்பது அதிக சத்துக்கள் அடங்கிய ஒரு மாத்திரை என்று கூறினால் அது மிகையாகாது. ஒரு முட்டையை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு எளிதாக பல சத்துக்கள் கிடைத்து விடுகின்றன.
4. உலர் திராட்சை - இதனை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மற்றும் நார் சத்து எளிதாக கிடைக்கிறது. சாப்பிடுவதற்கு இணிப்பாகவும் சத்தானதாகவும் உள்ளதால் குழந்தைகளும் விரும்புவர். உலர் திராட்சையை சுடுநீரில் நன்கு கழுவிய பிறகே குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.
5. பருப்பு வகைகளில் - அதிகமான புரதச்சத்து மற்றும் தாதுச்சத்து நிரம்பியுள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உடலில் உள்ள தேவையான கொழுப்பை தக்க வைக்கவும் புரதச் சத்து உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான ஆகாரமாகவும் பருப்பு வகைகள் உள்ளன. முந்திரி, வேர்க்கடலை, பாதாம் போன்றவைகள் அதிக சத்துக்கள் நிறைந்த பருப்புகளாகும்.
குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்து உடல் நலத்தை வீணாக்குவதை விட சத்தான உணவு பொருட்களை வீட்டில் வாங்கி வைத்து அவ்வப்போது கொடுப்பதால் உடலுக்கு எந்தவித தீங்கும் விளைவிக்காது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை



தடுப்பூசி

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை

  • பிசிஜி – பிறப்பின் போது
  • ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது
  • ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்
  • டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்
  • டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்
  • டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்
  • அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்
  • சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்
  • எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்
  • எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்
  • டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்
  • ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்
  • டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்
  • டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்
  • ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்
  • எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்
  • வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்
  • வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்
  • டெட்டானஸ் – 10 ஆண்டுகள்
  • சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)
  • டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்
  • டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்
குறிப்பு
மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை  பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்த‍வே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்
ஆதாரம் : அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை

குழந்தைகளை உயரமாக வளர வைப்பது எப்படி?


தம் குழந்தைகள் உயரமாக வளர வேண்டும் என்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் உண்டு. உயரமானவர்களுக்கு சமூக சூழ்நிலைகளில் கூடுதல் முக்கியத்துவம் உண்டு. நான்கு பேர் மத்தியில் உயரமான ஒருவர் நிற்கும் போது இயல்பிலேயே உயரமானவர் மனதில் உயர்ந்த மனப்பான்மையும் குட்டையானவர் மனதில் தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. மேலும் உயரமானவர்கள் தலைமைப் பண்பை எளிதில் வளர்த்துக்கொள்ள அவர்களின் உயரமே காரணமாக அமையும் சூழ்நிலைகளும் உண்டு.
உயரம் பாரம்பரியத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. கூர்ந்து நோக்கினால் தந்தையைப் போன்ற உயரத்தை ஆண் பிள்ளைகளும் தாயை போன்ற உயரத்தை பெண் பிள்ளைகளும் அடைகிறார்கள். தந்தை உயரமாக இருக்கும் சமயத்தில் மகன்கள் அதைவிட சற்று உயரமாகவும் தாய் குட்டையாக இருந்தால் மகள் அதைப் போன்றே குட்டையாகவும் வளர வாய்ப்புண்டு. மரபணுக்களால் ஒருவரின் உயரம் தீர்மானிக்கப்பட்டாலும் நம் முயற்சிகளின் மூலமும் குழந்தைகளின் உயரத்தை அதிகப்படுத்தலாம்.
உயரத்தை அதிகப்படுத்துவதில் சத்தான உணவு வகைகள் முக்கிய பங்காற்றுகின்றன. சரிவிகிதத்தில் தயாரிக்கப்படும் பானங்கள், மீன் எண்ணை, வைட்டமின் ஏ மற்றும் டி கொண்ட மாத்திரைகள், புரோட்டின் நிறைந்த எல்லா உணவுப் பொருட்கள் ஆகியவை உயரத்தை அதிகப்படுத்த வல்லவை. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டதன் மூலம் ஜப்பானியர்களின் சராசரி உயரம் தற்போது அதிகரித்துள்ளது.
உணவோடு உடற்பயிற்சிகளும் சேர்ந்தால் விரைந்து உயரத்தை அதிகரிக்கலாம். ஓடுதல், கயிறு தாண்டுதல், உட்கார்ந்து எழுதல், உயரத்தில் உள்ள கம்பிகளை பிடித்து தொங்குதல், கதவில் கால்களை முன்னோக்கி மடக்கி கொண்டு தொங்குதல் போன்ற பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்பித்தால் விரைவில் உயரமாக வளர்ந்து விடுவார்கள். ஆனால் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி குழந்தைகள் உயரமாக வளர காரணமாக அமைந்தாலும் பிற்காலத்தில் ஏதேனும் பின் விளைவினை ஏற்படுத்திவிடும். எனவே அளவான உடற்பயிற்சி அளிப்பது நல்லது.
குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பது போல் தோண்றினால் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மருத்துவரிடம் கூறி வயதுக்கேற்ற சராசரி உயரம் தம் குழந்தைகளுக்கு உள்ளதா என்று சோதித்துக் கொள்ளலாம். சராசரி உயரத்திற்கு குறைவாக இருந்தால் உடனடியாக உணவு அளித்தலையும், உடற்பயிற்சியையும் ஆரம்பிக்கலாம்.
குட்டையாக இருப்பவர்கள் குறுகிய மனதையும், உயரமாக இருப்பவர்கள் உயர்ந்த, பரந்த மனப்பான்மையையும் உயர்ந்த இலட்சியங்களையும் கொண்டிருப்பதாக உளவியல் கருத்து. எனவே உயரமானவர்களாகவும் உயர்ந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் குழந்தைகளை உருவாக்குங்கள்.

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்



உணவில் பசும்பால்

குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.

எலும்புகளை வலிமையாக்குகிறது

பசும்பாலில் போதியளவு கால்சியம் உள்ளது. இது உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. அதிகளவு கால்சியம் மற்றும் ஏனைய சத்துகள் மூலம் இது குழந்தைகளின் தசைக் கட்டுப்பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

வைட்டமின்கள்

பசும்பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது குழந்தையின் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. மேலும் வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்றஆபத்துகளை இது குறைக்கிறது.

புரோட்டீன்கள்

குழந்தைகள் வளரும் வயதில், அவர்களுக்கு புரோட்டீன் அவசியம். பசும்பால் மூலமாக நீங்கள் அவர்களுக்கு இதை வழங்கலாம். அதுமட்டுமல்லாமல் உங்கள் குழந்தையை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளது.

பசும்பால்

உங்கள் குழந்தைகளுக்கு அதிகளவில் பசும்பால் கொடுக்க வேண்டாம். இது சில சமயங்களில் ரத்த சோகையை ஏற்படுத்தலாம். எனவே, நடுத்தரமான அளவு கொடுக்கவும். ஒரு நாளைக்கு 16 அவுன்ஸ் (2 கப்) என்ற அளவில் நீங்கள் துவங்கலாம். பின்னர் குழந்தைக்கு இரண்டு வயது நெருங்கும் போது படிப்படியாக 24 அவுன்ஸ் வரை அதிகரிக்கலாம். உங்கள் குழந்தைக்கு பால் தேவைப்படும் அதே நேரம், இதன் மூலம் ஏனைய திட உணவுகள் உட்கொள்ளும் அளவு குறையலாம். எனவே, பசும்பால் கொடுக்கத் துவங்குமுன் குழந்தையின் பசியில் கவனத்துடன் இருங்கள்.
ஆதாரம் : அரசு தாய்சேய் நல மருத்துவமனை

குழந்தைகளுக்கு சளி கட்டினால் என்ன செய்வது?



சளி தொல்லை

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் காய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற  சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள்.
பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்  சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில்  குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல  மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.
தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி  சூரணம் செய்து 1ஸ்பூன்  அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி  இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய  சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சளி தொல்லை ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்

  1. மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே அழைத்து செல்ல நேர்ந்தாலும்  தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும். ஈரப்பதம்  மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்கவைக்ககூடாது. குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின்  உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.
  2. குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும். எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.  குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு  சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி  பிடித்துவிடும். எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.
  3. அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும்.  எனவே பாலூட்டும்  தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மழச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து  மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும். குழந்தைகள் இருக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆதாரம் : எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை

இருமலுக்குச் சித்தரத்தை


‘இது குளிர்ச்சி, இது சூடு, இது வாய்வு, இது நீர்’ என்ற உணவு பற்றிய புரிதல் இருந்த நிலம் இது. சமீபகாலமாக, ஹை கலோரி, லோ ஃபைபர் என்ற நவீனத்துக்குப் பலியாகிவிட்டது. முந்தைய புரிதல் இருந்தமட்டில், ‘இருமலுக்குச் சித்தரத்தை இதயத்துக்குச் செம்பரத்தை… சுக்குக்கு மிஞ்சிய மருந்துண்டா, சுப்பிரமணிக்கு மிஞ்சிய சாமியுண்டா’ என்ற சொலவடைகளில் சுகமாய் கைவைத்தியங்கள் ஒட்டியிருந்தன.

இருமலுக்குச் சித்தரத்தை என்பதுதான் இந்த வாரம் நாம் முகரப்போகும் சித்தர் ஹைக்கூ. ‘தொண்டையில் கட்டும் கபத்தைத் துரத்தும் பண்டைச் சீதத்தைப் பராக்கடிக்கும் கெண்டை  விழிப் பெண்ணே!’- என அகத்திய குணவாகடத்தில் அழகுப் பெண்ணுக்கு ஆரோக்கியக் குறிப்பாக, அரத்தையைக் காட்டிப் பாடியுள்ளார் சித்தர். இஞ்சிக் குடும்பத்துப் பெண்தான் சித்தரத்தை. இந்தியாவில் இஞ்சியைக் கொண்டாடுவது போல, தாய்லாந்தும், இந்தோனேசியாவும், வியட்நாமும் அரத்தை இல்லாமல் அம்மிப் பக்கம் போவது இல்லை.
சிற்றரத்தை, பேரரத்தை என அரத்தையில் இரண்டு ரகங்கள் உண்டு. இரண்டும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும்,  சித்தரத்தைக்கு மருத்துவச் சிறப்பு கொஞ்சம் ஒசத்தி. கால் டீஸ்பூன் அளவு அரத்தைப் பொடியைத் தேனில் குழைத்து, காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட்டால், நுரையீரலில் ஒட்டிக்கொண்டு அகல மறுக்கும் கோழைச் சளியை, இளக்கிகொண்டுவந்து வெளியேற்றி, இருமலைப் போக்கும். மேலும், சளிக்குக் காரணமான சால்மொனல்லா, ஸ்ட்ரெப்டோ காக்கக்ஸ் எனப் பல்வேறு நுண்ணுயிரிகளின் கொட்டத்தை அடக்கும் எதிர் நுண்ணுயிரி ஆற்றலும் (Anti-biotic activity) கொண்டது என, இன்றைய நவீன அறிவியலும் அங்கீகரித்து உள்ளது. அரத்தையை, சிறுசிறு துண்டுகளாக்கி, அதில் நான்கைந்து துண்டுகளை, இரண்டு டம்ளர் நீர் விட்டு, மூன்று நான்கு மணி நேரம் ஊறவைத்து, அந்த ஊறல் கஷாயத்தைச் சாப்பிட்டாலும் இருமல் போகும். ‘தாய்’ உணவகங்களில் இந்தக் கஷாயம் பிரசித்தி.
சின்னதாய் இரண்டு துண்டு அரத்தையை வாயில் அடக்கிக்கொண்டால், பேச்சுக்கிடையே வரும் இருமல் பேசாமல் அடங்கிவிடும். வறட்டு இருமல், சூட்டு இருமலுக்கு, அரத்தைத் துண்டுடன், பனங்கற்கண்டையும் சேர்த்து, வாயில் ஒதுக்கிக்கொள்ள வேண்டும்.
வயோதிகத்தில் வரும் மூட்டுவலிக்கும் ருமட்டாய்டு மூட்டுவலிக்கும், அரத்தையும் அமுக்கராங்கிழங்கையும் நன்றாக உலர்த்தி, பொடித்துவைத்துக்கொண்டு, கால் டீஸ்பூன் எடுத்து, தேனில் கலந்து, காலை, மாலை உணவுக்கு முன்பு, 45 நாட்கள் எடுக்க வேண்டும்.  சிறந்த வலிநிவாரணியாகவும் அழற்சியைப் போக்கி நோயின் தீவிரத்தைக் குறைக்கவும், இந்தப் பொடி உதவும். புற்றுநோய்க்கு, அறுவைசிகிச்சை எடுத்துக் கொண்டாலும், இந்தப் பொடியை, செயல்படு உணவாக (Functional food) எடுப்பது கூடுதல் பயனை அளிக்கும்.
சிற்றரத்தை, அதிமதுரம், தாளீசம், திப்பிலி  இவற்றைச் சமபங்கு எடுத்து, வறுத்துப் பொடித்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொண்டால், மூன்று மாதங்கள் இதன் திறன் குறையாது. அரத்தையின் மருத்துவச் செயலுக்கு, அதன் மாறாத மணம் முக்கியம். அடிக்கடி சளி, இருமல் வரும் குழந்தைகளுக்கு, இரைப்பிருமல் எனும் ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு, இந்தப் பொடியைக் கால் டீஸ்பூன் எடுத்துத் தேனில் குழைத்து, காலையில் உணவுக்கு முன் கொடுத்துவரலாம்.
நம் ஊர் நாட்டு மருந்துக்கடையில் அரத்தை மாதிரி பல அற்புதங்கள், அழுக்குக் கோணியில் கட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அயல் நாட்டவரோ, அதைப் பிரித்து மேய்ந்து, காப்புரிமையில் கட்டி வைத்திருக்கின்றனர். கரண்டியோடு நம் கையை அவர்கள் பிடிக்கும் முன்னராவது, நம் பாட்டன் வீட்டுச்சொத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்பாய் இருப்போம்!
அரத்தையும் – ஆய்வுகளும்!
மலையேற்றம், வாகனத்தில் பயணிக்கையில் வரும் வாந்திக்கு, அரத்தையை வாயில் அடக்கிக் கொள்ளலாம் என, அதனை ஆய்ந்துவரும் ஜப்பானியர்கள் ஆய்வறிக்கை தந்துள்ளனர்.  மூட்டுவலிக்குக் குறிப்பாக, நோய் எதிர்ப்பு ஆற்றல் சீர்கேட்டால் வரும், ருமட்டாய்டு மூட்டுவலிக்கு அரத்தைப் பொடி, நெடுநாள் பயன் தரும் என்கின்றன நவீன ஆய்வுகள். மூட்டுகளுக்கு இடையே உள்ள அழற்சியைப் போக்கும் தன்மையை, அரத்தையில் உள்ள தாவர நுண்கூறுகள் கொண்டிருப்பதை, ஆய்ந்தறிந்து சொல்கின்றார்கள் நம் ஊர் விஞ்ஞானிகள். தேரன் சித்தரோ, அரத்தையினால் சுவாசம், மூலம், சோபை, வாத சுரோணித நோய் எல்லாம் போகும் என பட்டியலிட்டுள்ளார்.  கேலங்கின், குய்ர்செட்டின், கேம்ப்ஃபெரால் எனும் மூன்று முக்கிய சத்துக்கள் கொண்ட அரத்தை, கொழுப்பைக் குறைக்கும் என்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள். அரத்தையினுள் இருக்கும் கேலங்கின் சத்து, நுரையீரல் புற்றில், அதன் வேகமான வளர்ச்சியைத் தடுக்கும் உணவாய், மருந்தாய் உதவும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. சமையலில் சித்தரத்தை சட்னி, சூப் என வெளுத்துவாங்கும் சீனரும் கொரியரும் அரத்தையில் நடத்திய ஆய்வுகள் ஏராளம்.  உணவாக இதைச் சேர்ப்பதால், புற்றுநோயின் தாக்கத்தையும் குறைக்கலாம் என்கின்றன இப்போதைய ஆய்வுகள்.

Wednesday, March 16, 2016

சிறுதானிய சமையல்... சுவை ப்ளஸ் ஆரோக்கியம்!

  • முன்பெல்லாம் வயதானவர்களின் பிரச்னைகளாகக் கருதப்பட்ட சுகர், பிளட் பிரஷர் போன்றவற்றை இப்போது இளைஞர்கள்கூட சுமந்துகொண்டிருக்கும் நிலை பரவலாகி வருகிறது. இதற்கெல்லாம் தவறான உணவுப்பழக்கத்தை முக்கிய காரணமாக உணவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நாம் பாரம்பர்யமாக உபயோகித்துவரும் சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னைகளைக் கட்டுக்குள் கொண்டுவரலாம். சிறுதானியங்களில் சுவையான, விதம்விதமான உணவு வகைகளை செய்து பரிமாறினால், குடும்பத்தினர் உற்சாகமாக சாப்பிட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வார்கள்’’ என்று கூறும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர்... ஸ்வீட் பால்ஸ், இடியாப்பம், லஸ்ஸி, டோக்ளா என்று  சூப்பர் சுவை கொண்ட உணவுகளை இங்கே சிறுதானியங்களில் தயாரித்து வழங்குகிறார்.
சாமை தயிர் சாதம்
தேவையானவை: சாமை அரிசி - ஒரு கப், தயிர், பால் - தலா அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு, தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: சாமை அரிசியை 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு நீரை வடித்துவிட்டு, அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சித் துருவல் தாளித்து தனியே எடுத்து வைக்கவும். சாமை சாதத்துடன் தயிர், பால், தாளித்த பொருட்கள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்து  பரிமாறவும்.
ராகி ஸ்வீட் பால்ஸ்
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், முந்திரி - 10, ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை, நெய் - தேவையான அளவு.
செய்முறை: கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். வெல்லத்துடன், அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சூடாக்கி, ஒரு கொதி வந்ததும் இறக்கி, வடிகட்டவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, கேழ்வரகு மாவை சேர்த்துக் கிளறவும். பிறகு, நெய்யைக் கையில் தொட்டுக்கொண்டு மாவை உருண்டைகளாக பிடிக்கவும்.
தினை பெசரெட்
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தினை அரிசி - முக்கால் கப்,  சின்ன வெங்காயம் - 10, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4 (அல்லது காரத்துக்கேற்ப), கொத்தமல்லித்தழை - கைப்பிடியளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி,  அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்... தினை பெசரட் தயார்!
கம்பு லஸ்ஸி
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், தயிர் - 3 கப், இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - 10 இலைகள், பச்சை மிளகாய் - 3, உப்பு  - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்பு மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கம்பு மாவை தண்ணீர் விட்டுக் கரைத்து, அடிகனமான பாத்திரத்தில் ஊற்றிக் கிளறி வேகவிடவும். மாவு நன்கு வெந்தபின் இறக்கி ஆறவிடவும். பிறகு அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுது, தயிர், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
குதிரைவாலி கிச்சடி
தேவையானவை: குதிரைவாலி அரிசி - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை  - தாளிக்கத் தேவையான அளவு, நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) - அரை கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குதிரைவாலி அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, காய்கறிக் கலவை சேர்த்துக் கிளறவும். இதனுடன்  உப்பு சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும். பிறகு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குதிரைவாலி அரிசியை சேர்த்து வேகும்வரை கிளறவும். நன்கு வெந்த பின் இறக்கி சூடாகப் பரிமாறவும்.
சிறுதானிய சத்துமாவு
தேவையானவை: மக்காச்சோளம் - கால் கிலோ, கோதுமை, கம்பு, வெள்ளை சோளம், கேழ்வரகு, கறுப்பு கொண்டைக்கடலை, அவல், சிவப்பரிசி, தினை - தலா  100 கிராம், முந்திரி, கறுப்பு எள்,  ஜவ்வரிசி - தலா 50 கிராம், ஏலக்காய் - 5.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து, ஆறியபின் ஒன்றுசேர்த்து, மெஷினில் கொடுத்து மாவாக அரைத்து வைக்கவும். தேவையானபோது இந்த மாவில் கஞ்சி செய்து, பால் சேர்த்துப் பரிமாறலாம். கஞ்சியுடன் பழ வகைகளை சேர்த்தும் தரலாம்.
இந்தக் கஞ்சி உடலை உறுதியாக்கும். வளரும் குழந்தை களுக்கு மிகவும் நல்லது.
ராகி முறுக்கு
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அகலமான பாத்திரத்தில் மாவு வகைகளுடன் உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். 6 டீஸ்பூன் எண்ணெயைத் தனியே சுடவைத்து மாவுக் கலவையில் ஊற்றிக் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்கு பிசையவும். கடாயில் எண்ணெயைக் காயவைக்கவும். முறுக்கு குழலில் `ஸ்டார்’ வடிவ துளையிட்ட அச்சை போடவும். பிசைந்த மாவை முறுக்கு குழலில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்குகளாகப் பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
வரகு புளியோதரை
 
தேவையானவை: வரகரிசி - ஒரு கப், மல்லி (தனியா), எள் - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10,  புளி -  பெரிய எலுமிச்சை அளவு, வேர்க்கடலை - 5 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு, பொடித்த வெல்லம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப. 
செய்முறை: வரகரிசியை 10 நிமிடம் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊறவைக்கவும். வெறும் வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளித்து, புளியைக் கரைத்து ஊற்றி... மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால்... புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை சாதத்துடன் கலந்து பரிமாறவும்.
சிறுதானிய இடியாப்பம்
தேவையானவை: சிறுதானிய சத்துமாவு (தயாரிக்கும் முறை முன் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளது)  - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், சர்க்கரை - தேவைக்கேற்ப, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை: சிறுதானிய சத்து மாவை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். பிறகு, அதனுடன் எண்ணெய், தேவையான அளவு வெந்நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். மேலே தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.
சிறுதானிய டோக்ளா
தேவையானவை: கேழ்வரகு மாவு - ஒரு கப், ரவையாக  உடைத்த கம்பு, தினை, சோளம்  (சேர்த்து) - ஒரு கப், தயிர் - 2 கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கேரட் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் கேழ்வரகு மாவு, கம்பு - தினை - சோள ரவை சேர்த்து ஊறவைக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல் சேர்த்துக் கிளறவும். இதை சிறுதானிய மாவு - ரவை கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உப்பு, கேரட் துருவலையும் சேர்த்துக் கலந்து, குழிவான தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, துண்டுகளாக்கிப் பரிமாறவும்.


-Vikatan

இருமல் மற்றும் நெஞ்சில் தீராத சளியா?

விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.




இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.
பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.
அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. 
சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.
மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.
தேவையான பொருட்கள்...
பால் -1 கப் 
மிளகு - 10 
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை 
சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு - 1 ஸ்பூன் 
செய்முறை.... 
மிளகை பொடித்துக் கொள்ளவும். 
பாலை காய்ச்சி கொள்ளவும்.
காய்ச்சிய பாலில் (பால் சூடாக இருக்க வேண்டும்) பொடித்த மிளகு, மஞ்சள் தூள், சுகர் லைட் (அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து பருகவும். 
இந்த பாலை சூடாக குடித்தால் நன்றாக இருக்கம். 
இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.




காசநோ‌ய்‌க்கு மரு‌ந்தாகு‌ம் தூதுவளை

தூதுவளை இலைகளை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, ஒரு தேக்கரண்டி பொடியை 1 டம்ளர் பசும்பாலில் கல‌ந்து ‌தினமு‌ம் காலையில் மட்டும் குடித்து வர நாவறட்சி, கபநீர், மூட்டு வலி, காசநோய் குணமாகும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, கடைந்தோ உண்டு வரக் கபக் கட்டு நீங்கி உடல் பலம் பெறும்.

தூதுவளை இலையைச் சாறு பிழிந்து அதேயளவு நெய்யில் காய்ச்சி 1 தேக்கரண்டியளவு 2 வேளை குடித்து வர, எலும்புருக்கிக் காசம், மார்புச் சளி உடனே நீங்கும்.

தூதுவளைக் காயை நிழலில் உலர்த்திக் காயவைத்து தயிர், உப்பு சேர்த்து பதப்படுத்தி எண்ணெயில் வறுத்து உணவுடன் உண்டு வர மனநலம் பாதிப்பு, இதய பலவீனம், மலச்சிக்கல் குணமாகும்.

தூதுவளைப் பூக்கள் 10 எடுத்து 1 டம்ளர் பாலில் காய்ச்சி வடிகட்டி, சிறிது சர்க்கரை சேர்த்து 48 நாட்கள் இருவேளை குடித்து வர, தாது விருத்தி, உடல் பலம், முகவசீகரம் பெறலாம்.

மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க....


மண்டைச் சளி – மார்புச் சளி நீங்க....

நமது உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.

இது இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும், இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு போகிறது - உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது.

கட்டிபட்டுப்போன சளியை - வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

நீங்கள் பார்க்கலாம் வீட்டுச் சுவற்றில் ஒட்டிய சளித் திவலையை அடுத்த நாள் பார்த்தால், அந்த இடத்தில் பளபளப்பாகத் தெரியும். கையை வைத்து தடவிப் பார்த்தாலும் ஒன்றும் தெரியாது ஆனால் சிறிது நீர் பட்டால் அது உப்பிப் பெரிதாகி இருப்பதைக் காணலாம். இது போன்ற நிலைதான் சளியால் பாதிக்கப்பட்ட உடல் கருவிகளுக்கும். உடல் சூடு அதிகரிக்கும் போது உடலுடன், நுரையீரலில் ஒட்டிக்கொள்ளும். 
உடல் தன்னிலை அடைந்து வெளியேற்றும் ஆற்றல் சீராக்கப் படும்போது சளி சுகமாக வெளியேறுகிறது. ஆனால் நாள்பட்ட கட்டிபட்ட சளியை வெளியேற்ற உடல்  மிகவும் துன்பமடைகின்றது.

எதிர்முறைய மருந்து வணிகர்கள் இதை தனது வியாபாரத்திற்கு அடித்தளமாக பயன்படுத்துகின்றனர். அவர்களை நம்பும் மனிதர்களை நிரந்தர நோயாளிகளாக்கத் தேவையான எல்லா பத்திய முறைகளையும் அவர்கள் மீது திணிக்கின்றனர். 
எதிர்முறையர்களின் மருந்துகளும், அவர்கள் நன்மைக்காக நமக்குக் காட்டும் வாழ்க்கை முறைகளும் உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும் உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. 
 இதனால், பாதிக்கப்பட்டவர்கள் சளியை வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் – சிறிது காலம் தொல்லை இல்லாது இருக்கின்றனர் ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும்-மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியாலும் நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.

குழந்தைகளை சளித் தொல்லைக்காக எதிர்முறைய மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அவர் என்ன கூறுகிறார்.

குளிர்ச்சியான உணவுகளைத் தவிருங்கள், தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம், சூடான தண்ணீர் மட்டும் கொடுங்கள், வாரம் அல்லது பத்து நாட்களுக்கோர் முறை சுடுநீரில் குளித்தால் போதும், பழங்களைத் தவிர்த்து விடுங்கள், காதுகளை நன்கு மூடிவையுங்கள் (சென்னையில் இந்த வெயிலிலும் காது மூடிகள் பயன்படுத்தும் ஆட்களை பார்க்க முடிகிறது) என பல பத்தியங்களோடு போதையூட்டும் டானிக்குகளையும், சளி வெளியேற்றாது தடுக்கும் மருந்து, மாத்திரைகளையும் கொடுத்து விடுகிறார்கள். 
உடலுடைய சுகமளிக்கும் ஆற்றலைத் தடுக்க முடியாததால் பிரைமரி காம்ப்ளக்ஸ் என பெயரிட்டு பல ஆண்டுகள் வைத்தியம் பார்க்கிறார்கள். இவர்களின் மருந்துகளால் உடலின் சுகமளிக்கும் ஆற்றல் மிக பலவீனமாகி அதன் காரணமாக வெளியேற்றும் முயற்சி தடைபட்டு நின்ற பின் அந்த டாக்டர் தான் கஸ்டப்பட்டு குணப்படுத்தினார் எனப் பேச ஆரம்பிக்கிறார்கள். 

வெளிக்காட்டாமல் -வெளியேற்றப்பட முடியாமல் உடலில் கழிவுத் தேக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 

சில ஆண்டுகளுக்குள், மீண்டும் உடல் பருவத்தின் மாறுபாட்டால் உடல் சக்தி பெற்று தன்னைச் சுகப்படுத்த முயலுகிறது. அப்போதும் உடலின் மொழியறியாமல், புதிய நோயாக நினைத்து இளைப்பு, ஈளை (வீசிங் டிரபுள், ஆஸ்துமா, டி.பி) என்ற புதிய பெயரில் அதே அல்லது புதிய டாக்டரையோ தேடிப்போய் வாழ்நாள் முழுவதும் வைத்தியம் பார்க்கிறார்கள்.
நினைத்துப் பாருங்கள் நமது கண்களுக்கு தெரிந்த இந்த காட்சிகள் மிக மலிந்துள்ளன நம் நாட்டில். டி.பி இது - இந்தியன் காமன் டிசிஸ் என முத்திரையும் கொடுத்திருக்கிறார்கள் விழாவும் எடுக்கிறார்கள்.

சளி - இதிலிருந்து விடுபட முடியாதா?

முடியும். மிக எளிதாக, சுகமாக விடுபட முடியும்.

எப்படி?

நமது உடல் இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக சளி மட்டுமல்ல, அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம். 

நோயற்ற வாழ்வைப்பெற உங்கள் ஞாபகத்துக்காக,

1.        

இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக் கொள்ளுதல். (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள் உணவை முடிப்பது சிறப்பு)

2.       இரவு கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்காதிருத்தல். (இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு, கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)

3.      

இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. ( சில நேரம் தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும் சாப்பிடலாம்.)

4.     

  இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல். (மனம் சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)

5.      

அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல் மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)

6.      

காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. (இரவு பணியில் ஈடுபட்டு இரவு நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)

7.      

பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக. (வெறும் விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால் உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு, ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கிக் கொள்க.)

8.      

 நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல் வேண்டும்.(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துக.)

9.     

  இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும்.(சோப்பு, சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே இவற்றைத் தவிருங்கள்.)

10.    

வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும்.(எண்ணெய் குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம் அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் - சுகத்தை)

11.   காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற் கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும் நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)

12. 

  உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. (மூன்று வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)

13. 

  மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க. (இரண்டு வேளை உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை ஒட்டி எழுதுகிறேன்.)

14. 

  பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் 

-தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும். (எதிர்முறையர்களின் அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)

15.  

கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு வெளியேற்றப் பழக்க வேண்டும். 
(உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)

16.  

மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல் நல்லது. ( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால் உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)

17. 

  மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும் நல்லது.  
(இப்போதய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும் மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.)

முன் கூறியபடி பழக்கவழக்கங்களைச் சீர்செய்து கொள்ள, உடலின் கழிவு வெளியேற்றம் சீராகி உடல் நலம் பெருகும்.

உடல்நலம் என்பது மிக எளிதான ஒன்று தான் நாம் நமது உடலியற்கையை அறிந்து உடலுக்கு உதவினால் எல்லாம் சுகமே. மேலும் நம்மைப்படைத்த படைப்பாற்றல் – இறைவன் எப்பொழுதும் நம்மை காக்க துணை வரும்.