Monday, March 7, 2016

உளுந்தங்கஞ்சி



mix
இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.
உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு.
உளுந்தங்கஞ்சி, உளுந்தங்களி சாப்பிட்டால் சுருங்காத தோலும், மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்கும்.
முதுகு வலி,இடுப்புவலி இரண்டுமே இருக்காது. பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள் :
1) உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)
2) பச்சரிசி அரை டம்ளர்
3) வெந்தயம் ஒரு தேக்கரண்டி
4) பூண்டு 20 பல்லு
5) வெல்லம் அல்லது கருப்பட்டி
இனிப்புக்கு ஏற்றது போல்
6) தேங்காய் ஒரு மூடி
செய்முறை:
உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.( குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.)
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்,.
செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)


-------------------------------------------------------------------

“பின்ன… உளுந்த அவ்வளவு சாதாரணமா நெனச்சிடாத! நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு உணவு. அதுமட்டுமில்லாம, பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கு இந்த உளுந்து. அதோட, குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது. தினமும் நாம உளுந்த உணவுல சேத்தா மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனயெல்லாம் தீரும். அப்புறம்… இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது இந்த உளுந்து.” “ஓ பாட்டி… பாட்டி…! நிறுத்துங்க மாவு நல்ல பதத்துக்கு வந்திருச்சு, எடுத்து சட்டியில அள்ளுங்க! “ஆங்… சொல்ல மறந்துட்டேன்பா! உளுந்த வடை, உளுந்தங் கஞ்சி சாப்பிட்டு வந்தா உன்ன மாதிரி இளைத்த உடலெல்லாம் பயில்வான் மாதிரி ஆயிடலாம்!” பாட்டி கேலிப்பார்வை பார்த்தபடியே மாவினை சட்டியில் அள்ளினாள். நான் வடையை ருசிக்கும் ஆர்வத்தில் பாட்டியின் வடைக்காக காத்திருந்தேன்! குறிப்புகள்: உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும். வாத நோய் மற்றும் முடக்கு நோய்க்கு உளுந்து தைலம் (External use) உதவும். (உளுந்து தைலம் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கும்)..

No comments:

Post a Comment